இதுவரை ஜோடி போடாமல் இருந்த முன்னணி நடிகர் படத்தில் கீர்த்தி சுரேஷ், ரசிகர்கள் உற்சாகம்

நடிகைகள் by Tony
Topics : #Keerthy Suresh

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் நடித்த ரஜினி முருகன் படம் பிரமாண்ட ஹிட் அடித்தது.

இதனால் இவரின் மார்க்கெட் உயர்ந்தது, அதன் பிறகு தொடரி, பைரவா, சாமி 2 ஆகிய படங்களில் நடித்தார்.

மேலும், தெலுங்கு சினிமாவிலும் பவன் கல்யான் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

இந்நிலையில் தற்போது மகேஷ் பாபு நடிக்கவிருக்கும் புதிய படமொன்றில் கீர்த்தி ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார்.

தன் திரைப்பயணத்தில் முதன் முறையாக மகேஷ் பாபுவுடன் கீர்த்தி ஜோடி சேர்வதால் ரசிகர்கள் செம்ம உற்சாகத்தில் உள்ளனர்.