Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வரலட்சுமியுடன் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கும் சரத்குமாரின் சகோதரர் மகன்! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ

சினிமாவில் சுப்ரீம் ஸ்டார் என கொண்டாடப்பட்டவர் நடிகர் சரத்குமார். அரசியல், பத்திரிக்கை என பன்முக திறமை கொண்டவர். அதே போல நடிகை ராதிகாவும் சினிமா மட்டுமல்லாது, சீரியலிலும் திறமையான நடிகையாக வலம் வருகிறார்.

இருவரும் இணைந்து ஜோடியாக நடித்த வானம் கொட்டட்டும் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி படம் நல்ல வரவேற்பை பெற்றது.

சரத்குமார் சாயா தேவி ஆகியோரின் மகளான வரலெட்சுமியும் திரையுலகில் அழுத்தமான கதாபாத்திரங்களையும், கதைகளையும் தேடிப்பிடித்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் சரத்குமாரின் சகோதரர் மகன் ராம்குமார் ஹீரோவாக அறிமுகமாகிறாராம், உடன் வரலெட்சுமியும் நடிக்கிறாராம்.

கலர்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ராதிகா வெளியிட்டுள்ளார்.