Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தீடீரென மூச்சு தினரால்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா..

பிரபல பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனும் கடந்த ஜூலை 12 ஆம் தேதி கொரோனா தொற்று இருக்கிறது என உறுதி செய்யப்பட்டு, மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டு குணமடைய சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து பச்சன் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் பாலிவுட் நடிகையும், அபிஷேக் பச்சனின் மனைவியுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதியாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கூரான வைரஸின் அறிகுறிகள் சிறிய அளவில் இருந்ததால், இருவரும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.

இதனால் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் இருவரும் கடந்த சில நாட்களாக அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருந்து வருகின்றன.

இந்நிலையில், கொரானா காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட ஐஸ்வர்யாவுக்கும் அவரின் மகளுகும் நள்ளிரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவின் தாக்கம் அதிகமானதால் தான் இந்த மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அவர்கள் விரைவில் குணமடைய அவர்களது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிராத்தனை செய்து

வருகின்றனர்.