Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கௌதம் மேனன் இயக்கத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ்.. ஹீரோ யார் தெரியுமா..?

தமிழ் திரையுலகில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு இயக்குனர் திரு கௌதம் மேனன்.

விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், மின்னலே, வேட்டையாடு விளையாடு, அச்சம் என்பது மடமையடா, என பல ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் கௌதம்.

இவர், இயக்கத்தில் மட்டுமல்லாமல் சமீபத்தில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளயடித்தால் படத்தின் மூலம் நடிகர் என்று காட்டினார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் கமல் ஹாசன் அவர்கள் நடித்து வெளிவந்த படம் வேட்டையாடு விளையாடு.

இப்படம் கமலின் திரையுலக பயணத்தில் மற்றொரு பரிமாணத்தை காட்டி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

சமீபத்தில் கௌதம் மேனன் அளித்த பேட்டியில் வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் மாகம் உருவாகும் என கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடிப்பாரா என கேள்வி எழுந்தபோது, இல்லை அவருக்கு பதிலாக அனுஷ்காவை நடிக்க போகிறார் என தகவல்கள் கசிந்தது.

இந்நிலையில் தற்போது கமல் ஹாஸன் அவர்களுக்கு இப்படத்தில் ஜோடியாக நடிக்க இளம் நடிகை கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை போய்கொண்டு இருக்கிறதாம்.

மேலும் தற்போது கீர்த்தி சுரேஷ் ரஜினியின் அண்ணாத்த படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.