Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியுடன் நடித்த பிரபல நடிகை பரிதாப மரணம்! உயிருக்கு போராடும் நேரத்தில் சிகிச்சை அளிக்க மறுத்த கொடுமை - பரிதவித்த மகள்

கொரோனா இந்தியாவில் 11 லட்சத்திற்கும் அதிகமானோரை பாதித்துள்ளது. 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்னும் ஊரடங்கு நீடித்து வருகிறது. முழுமையான தளர்வுகள் ஏதும் இல்லை.

இக்காலகட்டத்தில் சினிமா பிரபலங்கள் சிலரும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இறந்துள்ள சம்பவமும் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் 400க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நடிகை சாந்தம்மா நேற்று வயது முதிர்வு, உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளார்.

கன்னட சினிமாவை சேர்ந்த இவருக்கு வயது 95. கன்னட சினிமாவை சேர்ந்த இவர் சூப்பர் ஸ்டார் ராஜ்குமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோருடன் படங்களில் நடித்துள்ளார்.

அவருக்கு நான்கு மகன்கள், இரண்டு மகள்கள். மைசூரில் வசித்து வந்த அவருக்கு உடல் நலம் குன்றிய போது மருத்துவமனைக்கு அவரின் மகள் அழைத்து சென்ற போது கொரோனா பயத்தால் யாரும் சிகிச்சை அளிக்க முன்வரவில்லையாம்.

இதனால் மாலை 4 மணி முதல் அதிகாலை 1 மணி வரை அலைந்துள்ளார். இறுதி ஒரு மருத்துவமனை சிகிச்சை அளிக்க முன்வந்த போதும் சாந்தம்மாவின் உயிர் பிரிந்துவிட்டது.

சாந்தம்மாவின் கணவரும் நடன இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.