Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தேசிய விருது பெற்ற பிரபல நடிகருக்கும், மனைவிக்கும் கொரோனா தொற்று! மருத்துவமனை படுக்கையில் தம்பி - சோகத்துடன் வெளியிட்ட போஸ்ட் இதோ

கொரோனா வைரஸ் யாரும் எதிர்பாராத வகையில் இவ்வருடம் கோர தாண்டவத்தை அரங்கேற்றியுள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் இதுவரை 27 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.

சினிமா பிரபலங்களில் அண்மையில் நடிகர் அமிதாப் பச்சன் குடும்பத்தினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்துவிட்டனர்.

இந்நிலையில் தேசிய விருது பெற்ற Wrong Side Raju என்ற படத்தில் நடித்த நடிகர் பிரதிக் காந்தி என்பவருக்கும் அவரின் மனைவி பாமினி ஓசா மற்றும் சகோதரர் புனித் ஆகிய மூவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாம்.

இதில் பிரதிக் மற்றும் அவரின் மனைவி இருவரும் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார்களாம்.

அவரின் தம்பி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறாராம். அதனால் பிரதிக் ரசிகர்களை மிகவும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.