Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சுஷாந்த் சிங்கின் காதலியின் சொத்து இதுதானாம்! தற்கொலை விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

கடந்த ஜூன் மாதம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பையில் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்தின் அப்பா சுஷாந்தின் காதலியான நடிகை ரியா மீது புகார் அளித்திருந்தார்.

இது குறித்து பலருக்கும் சந்தேகம் நீடித்து வந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது. சுஷாந்தின் வங்கிக்கணக்கிலிருந்து ரூ 15 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமலாக்கத்துறையினரின் முன்னிலையில் ரியா மற்றும் அவரின் நண்பர் ஆஜராகினர். 20 கேள்விகள் இதில் கேட்கப்பட்டது. 8 மணி நேரத்திற்கும் மேலாக இந்த விசாரணை நடைபெற்றது.

இதில் சுஷாந்த் எங்கள் குடும்பத்தை பாராட்டி எழுதிய கடிதம் என ரியா வெளியிட்டார். இதில் ரியாவின் குடும்பத்தினர் தன்னுடைய வாழ்வில் இடம்பெற்றிருப்பது நன்றிக்குரிய விஷயம் என எழுதியிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ரியா என்னிடம் இருக்கும் சுஷாந்தின் சொத்து இதுதான் என கடிதத்தை ஒப்படைத்தாராம்.