Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திருமண கோலத்தில் பிகில் பட புகழ் அமிர்தா நடத்திய போட்டோ ஷூட், அழகிய புகைப்படங்களுடன் இதோ

முன்னணி இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் தெறி, மெர்சல் ஆகிய இரு படங்களை தொடிரந்து மூன்றாம் முறையாக நடித்து வெளிவந்த படம் பிகில்.

இப்படத்தில் கால்பந்து விராங்கனைகளாக நடிகை இந்துஜா, வர்ஷா, அமிர்தா, ரெபா மோனிகா ஜான் மற்றும் பல பெண்கள் நடித்திருந்தனர்.

அதில் குறிப்பாக படத்தில் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட கதாபாத்திரம் நடிகை அமிர்தா அய்யரின் தென்றல் கதாபாத்திரம் தான்.

மேலும் இப்படத்திற்கு முன்பு ஓரிரு படங்கள் அமிர்தா நடித்திருந்தாலும், இப்படம் இவருக்கு திரையுலகில் பேர் சொல்லும் படமாக அமைந்தது.

இதன்பின் தற்போது பிக் பாஸ் நடிகர் கவினுடன் இணைந்து லிப்ட் எனும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் கூட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. மேலும் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகியது.

இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் திருமண கோலத்தில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்...