Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை கீர்த்தி சுரேஷ் சிறு வயதில் எப்படி உள்ளார் பாருங்க- எந்த நடிகருடன் புகைப்படம் எடுத்துள்ளார் தெரியுமா?

தமிழ் திரையுலகில் தற்போது பெரிதும் எதிர்பார்க்கப்படும் முன்னணி நடிகைகளில் ஒருவராக ரசிகர்கள் மத்தியில் விளங்கி வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான இது என்ன மாயம் எனும் படத்தின் மூலமாக நம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் என்பதை நாம் அறிவோம்.

மேலும் நடிகையர் திலகம் எனும் ஒரே படத்திற்காக இவர் வாங்கிய தேசிய விருது, இவருக்கு தென்னிந்திய திரையுலகில் ஓர், சிறந்த நடிகை எனும் பெயரை பெற்று தந்தது.

சமீபத்தில் கார்த்திக் சுப்ராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் சோலோ ஹீரோயினாக நடித்திருந்த பென்குயின் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது தன் புகைப்படங்களை பதிவிட்டு வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி அவர்களுடன் தான் சிறு வயதில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்...