Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அந்த நாயகி படமா, அப்போது நான் விலகிக் கொள்கிறேன் என்ற பி.சி. ஸ்ரீராம்- யார் படம் தெரியுமா?

மனதில் பட்டது தான் சரி என்று பேசி பல சர்ச்சைகளில் சிக்கியவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.

இவர் வாரிசுகள் ஆளும் பாலிவுட் அதற்கு இந்த பிரபலங்கள் அனைவரும் முக்கிய காரணம், அவர்களுக்கு கொடுத்திருக்கும் விருதினை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அடுத்தடுத்து பல விஷயங்களை பேசிக் கொண்டே இருந்தார்.

மறைந்த நடிகர் சுஷாந்த் தற்கொலைக்கும் இவர்களே காரணம் என சில முக்கிய பிரபலங்களின் பெயர்களை வெளிப்படையாக கூறி பரபரப்பை கிளப்பினார்.

இந்த நிலையில் கங்கனா கமிட்டாகியிருக்கும் படத்தில் தான் வேலை செய்ய விரும்பவில்லை என வெளியேறியுள்ளார் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் அவர்கள்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்திலும் அவர் பதிவு செய்துள்ளார்.