Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இடித்து நொறுக்கப்பட்ட நடிகை கங்கனா ரனாத்தின் அலுவலகம்- அதிர்ச்சியில் திரையுலகம்.

நடிகை கங்கனா ரனாத் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்பவர். நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக பாலிவுட் திரையுலகம் மற்றும் மும்பை போலீஸ் மீது குற்றசாட்டுகளை தெரிவித்து இருந்தார்.

அதனை தொடர்ந்து நடிகை கங்கனா ரனாத்தின் குற்றசாட்டுகள் அனைத்தும் மிக சர்ச்சையாக மாறியது.

மேலும் நேற்று நடிகை கங்கனா ரனாத்திற்கு சொந்தமான மும்பை அலுவலகத்திற்கு வெளியே பெருநகர மும்பை மாநகராட்சி நோட்டீஸ் ஓட்டியுள்ளது.

அதில் அலுவலக வளாகத்தில் சட்டவிரோதமான வகையில் கட்டுமானம் நடைபெற்றுள்ளது என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கங்கனா ரனாத்தின் மும்பை அலுவலகத்தை இன்று மும்பை மாநகராட்சியை சேர்ந்தவர்கள் இடித்து நொறுக்கியுள்ளனர். இது சம்மந்தமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

நடிகையின் வீடு இடிக்கப்பட்டது குறித்து பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது கருத்தையும் தெரிவித்துள்ளார்.