தமிழ் திரைப்படங்களில் காமெடி நடிகர்களில் அக்கால கட்டத்தில் பலராலும் ரசிக்கப்பட்டு கொண்டாட்டப்பட்டவர் தேங்காய் ஸ்ரீனிவாசன். அவரின் காமெடி, பாடி லாங்குவேஜ் எல்லாம் ஒரு தனி ஸ்டைல்.
சினிமா பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவுக்கு வருவது சகஜம் தானே. அவ்வகையில் இவரின் பேத்தியா ஸ்ருதிகா சூர்யாவுக்கு ஜோடியாக 2002 ல் வெளியான ஸ்ரீ படத்தில் நடித்திருந்தார்.
15 வயதிலே சினிமாவில் முகம் காட்ட தொடங்கிய இவர் ஆல்பம், நல தமயந்தி, தித்திக்குதே என சில படங்களில் நடித்திருந்தாலும் பெரியளவில் வெற்றி பெறமுடியவில்லை.
பின் அர்ஜூன் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப பெண்ணானார். சினிமாவுக்கும் பிரேக் கொடுத்துவிட்டார்.
அவருக்கு ஆரவ் என 10 வயதில் மகன் இருக்கிறாராம்.