நடிகை ஸ்ரேயா சரண், சங்கர் பட ஹீரோயினாக முக்கியத்துவம் பெற்று தொடர்ந்து முன்னணி ஹிரோயினாக இருந்து வந்தார். ரஜினி, விஜய், ஜெயம் ரவி, தனுஷ், விஷால் என பலருடன் நடித்திருந்தார்.
அதன் பின் இவருக்கும் பெரியளவிலான பட வாய்ப்புகள் தமிழில் அமையவில்லை. அத்துடன் இவர் தெலுங்கு சினிமா பக்கம் செல்ல நல்ல வரவேற்பு அங்கு கிடைத்து வருகிறது.
ரஷ்யாவை சேர்ந்த தன் காதலரை திருமணம் செய்துகொண்ட பின் இந்தியாவிலேயே செட்டிலாகிவிட்டார்.
அடுத்ததாக அவரின் நடிப்பில் Gamanam என்ற படம் உருவாகிவருகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
இதன் போஸ்டர் ஸ்ரேயாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.