பாலிவுட் சினிமாவில் அதிகம் வருமானம் ஈட்டும் நடிகர் அக்ஷய் குமார். சிறந்த சமூக சேவகரும் கூட. அண்மையில் கொரோனா நிவாரண நிதிக்கு பணத்தை வாரி இறைத்தார்.
காஞ்சனா படத்தின் ரீமேக்கான லட்சுமி பாம் படத்தில் திருநங்கையாக நடித்து வருகிறார். உலகளவில் புகழ் பெற்ற டிவி நிகழ்ச்சியான பியர் கிரில்ஸ் இன் டு த வைல்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அதில் நடிகை ஹூமா குரேஷியுடன் சாட்டில் சில விசயங்களை பகிர்ந்துகொண்டார். அப்போது அக்ஷய யானை சாண டீ குடித்து பற்றி கேட்கப்பட்டது.
இதற்கு அவர் அதை பற்றி நான் கவலைப்படவில்லை. ஆர்வமாகத்தான் இருந்தேன். ஆயுர்வேத காரணங்களுக்காக நான் தினமும் மாட்டு கோமியம் குடிக்கிறேன். எனவே எனக்கு யானை சாண டீ குடிப்பதில் எந்த நெருடலும் இல்லை என கூறியுள்ளார்.