Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை நயன்தாரா வீட்டில் விசேஷம் - காதலனுடன் கேக் வெட்டி கொண்டாட்டம், புகைப்படத்துடன் இதோ..

தமிழ் உச்ச நட்சத்திர நடிகையாகவும் ரசிகர்கள் மத்தியில் லேடி சூப்பர் ஸ்டாராகவும் விளங்கி வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகி வரும் நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

நேற்று தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் கோவாவில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அவரின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். மேலும் விக்கி கிளிக்ஸ் எனும் ஹாஷ்டாகில் வெள்ளை நிற ஆடையில் தேவதைபோல் இருக்கும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டார்.

இந்நிலையில் தற்போது தனது அம்மாவின் பிறந்தநாளை தனது காதலன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார் நடிகை நயன்தாரா. தற்போது அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்...