Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சொந்த வீட்டிலேயே நகையை திருடி தலைமறைவான சீரியல் நடிகை- திடுக்கிடும் தகவல்

கொரோனா என்ற கொடிய நோயின் தாக்கத்தால் உலகமே பெரிய பாதிப்பில் இருக்கிறது.

இந்த கஷ்டமான நேரத்தில் பலரும் வேலை இல்லாமல், பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அப்படி ஒரு நடிகை தனக்கு ஏற்பட்ட கஷ்டத்தால் சொந்த வீட்டிலேயே திருடியுள்ளார்.

தெய்வமகள் சீரியலில் பிரகாஷின் இரண்டாவது அண்ணியாக நடித்தவர் சுசித்ரா.

நடிகை சுசித்ரா கார் ஓட்டுனர் மணிகண்டன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். படப்பிடிப்பு இல்லாமல் இவர் இருக்க, டிரைவிங் வேலை இல்லாமல் கணவரும் இருக்க மிகுந்த கஷ்டத்தில் இருந்துள்ளனர்.

இதனால் சுசித்ரா தனது கணவரை அவரது அப்பா வீட்டில் இருக்கும் நகைகளை திருடி வரச்சொல்லி அனுப்பியுள்ளார். அவர் 18 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடி வந்துள்ளார்.

இது தெரிந்ததும் அவரது அப்பா காவல் நிலையத்தில் புகார் கொடுக்க போலீசார் மணிகண்டனை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள சுசித்ராவை போலீசார் தேடி வருகின்றனர்.