Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சீரியல் நடிகை தற்கொலை! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல் - மூன்று பேர் கைது

தற்கொலை பிரச்சனைகளுக்கு தீர்வல்ல என்றாலும் சினிமா, சின்னத்திரை பிரபலங்களின் வாழ்க்கை பிரச்சனைகள் கடைசியில் தற்கொலை சம்பவத்தில் போய் முடிவது அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.

அண்மையில் சீரியல் நடிகை ஸ்ரவானி ஹைதராபாத் மதுரா நகரில் உள்ள தன் வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பெற்றோர் அளித்த தகவலால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி தற்கொலை குறித்து விசாரணையை தொடங்கினர்.

இதில் டிக்டாக்கில் அறிமுகமான தேவ்ராஜ் ரெட்டி என்பவர் ஸ்ரவானியிடம் பணம் கேட்டு மிரட்டியதாக நடிகையின் சகோதரர் ஷிவா பேட்டியளித்தார்.

இதனால் போலிசார் தேவ்ராஜ் ரெட்டி, தெலுங்கு தயாரிப்பாளர் அசோக் ரெட்டி, சாய் கிருஷ்ணா ஆகிய மூவரையும் கைது செய்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில் ஸ்ரவானி 8 வருடங்களாக சீரியல்களில் நடித்து வருவதாகவும், முதலில் அவருக்கு சாய் கிருஷ்ணாவுடன் பழக்கம் ஏற்பட்டு 3 வருடங்களுக்கு பிறகு பிரிந்துவிட்டார்களாம்.

மேலும் சீரியல்களில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தித்தந்த அசோக் ரெட்டியுடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் பிரிந்துவிட்டனர்.

அதன் பின் டிக்டாக்கில் தேவராஜ் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தேவ்ராஜ் பற்றி சாய்கிருஷ்ணா ஸ்ரவானியின் பெற்றோரின் புகார் அளித்துள்ளார். மூவரும் ஸ்ரவானியை திருமணம் செய்வதாக கூறி பின்னர் மற்றவர்களுடன் பழகுவது குறித்து அவரை துன்புறுத்தியுள்ளனர். தேவ்ராஜ் உடன் கடைசியாக பேசியதில் சாய் கிருஷ்ணா, அசோக் ரெட்டி, குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் தன்னை கொடுமைப்படுத்துவதாக ஸ்ரவானி கூறியுள்ளார்.

ஸ்ரவானியை திருமணம் செய்வதாக கூறியிருந்த தேவ்ராஜும் பின்னர் மறுத்திவிட்டதாக தெரியவந்துள்ளது. இந்த மன உளைச்சலில் தான் ஸ்ரவானி தற்கொலை செய்துள்ளாராம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் ஸ்ரவானியும் தேவ்ராஜும் ஒருவரை ஒருவர் புகார் அளித்ததும் நடைபெற்றுள்ளது.