Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்புவின் வாழ்க்கையை ஒருநாள் வாழ்ந்து பார்க்கனும்- பிரபல நடிகையின் ஆசை

சிம்பு தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் இளம் நடிகர். நடிப்பு, நடனம், பாடல், இசை, தொழில்நுட்ப விஷயங்கள் என சினிமா துறையில் எல்லா விஷயங்களிலும் ஒரு கை பார்த்தவர்.

ஆனால் நடுவில் தொடர்ந்து இவருக்கு பிரச்சனைகளாக எழும்ப ரசிகர்கள் மிகவும் வருத்தப்பட்டார்கள். தற்போது அவர் தன்னுடைய படங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

இவரை போன்ற வாழ்க்கையை ஒருநாள் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று நினைப்பதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.

ஒரு பேட்டியில் அவர், படப்பிடிப்பில் ஒருநாள் சந்தித்தேன், ஸ்பாட்டுக்கு வந்து ஒரு மணி நேரத்தில் நடித்து முடித்துவிட்டார்.

அதற்குள் முடித்துவிட்டீர்களா என்று கேட்டேன், அவ்வளவு தான் முடிந்தது என்றார்.

நடிக்க வந்தார் என்றால் மேஜிக் போல் டக் என்று முடித்துவிட்டு சென்று விடுவார், செம நடிகர், அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.