Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸில் 4 நிகழ்ச்சியில் விஜய்-சூர்யா பட நடிகை- இப்படி ஒரு பேட்டி கொடுத்துள்ளாரா?

பிக்பாஸ் 4வது சீசன் என்று தொடங்குகிறது என்பது தெரியவில்லை. ஆனால் போட்டியாளர்களின் பெயர்கள் மட்டும் நிறைய பேசப்பட்டு வருகிறது.

ரியோ ராஜ், ரம்யா பாண்டியன், ஷிவானி என சில பிரபலங்கள் ஒரே ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இவர்கள் எல்லாம் உறுதியான போட்டியாளர்களா என்பது தெரியவில்லை. அண்மையில் சஞ்சீவ்-ஆல்யா இருவரும் கமல்ஹாசன் அவர்களுக்காக ஒரு ஸ்பெஷல் நடனம் ஆடினார்கள். அது பிக்பாஸ் ஆரம்பத்திற்கு தான் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகையும், நடன கலைஞருமான அபிநயஸ்ரீ பிக்பாஸ் 4 வீட்டிற்குள் செல்கிறார் என்கின்றனர். இந்த லாக் டவுனில் ஒரு பேட்டியில் பிக்பாஸ் 4ல் கூப்பிட்டால் கண்டிப்பாக போவேன் என்று அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.