Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எஸ்.பிபி அவர்களின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள முடியாது- வருந்தும் நடிகை

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள் இன்று மதியம் 1 மணியளவில் உயிரிழந்தார்.

இந்த துக்கத்தில் இருந்து யாராலும் வெளியே வர முடியவில்லை. பாடல்களால் அனைவரையும் கட்டிப்போட்ட அவர் இப்போது நம்முடன் இல்லை.

இவரின் மரண செய்தி வந்ததில் இருந்து மண்ணில் இந்த காதல் இன்றி என்ற பாடல் வைரலாகிறது.

இப்பாடலில் எஸ்.பி.பி அவர்களுடன் நடித்த ராதிகா ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில், அவர் சீக்கிரம் குணமாகி வீடு திரும்புவார் என்று தான் நினைத்தேன், இப்படி ஆனது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

மிகவும் ஜாலியானவர், தன்னைத் தானே சில நேரங்களில் காமெடி செய்து சிரிக்க வைப்பார்.

அவரது இறுதி சடங்கில் என்னால் கலந்துகொள்ள முடியாது, படப்பிடிப்பில் மாட்டிக் கொண்டேன், அது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது என கூறியுள்ளார்.