Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காதலர் விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு நயன்தாரா செய்த செலவு இத்தனை லட்சமா?- வாய் பிளக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் ஒரு இளம் இயக்குனராக களமிறங்கியவர் விக்னேஷ் சிவன். அவர் மிகப்பெரிய ஹிட் படங்கள் கொடுத்தாரா என்றால் இல்லை.

அவர் இயக்கிய படங்கள் தோல்வியும் இல்லை மிகப் பெரிய ஹிட் என்பதும் இல்லை. இயக்குவதை தாண்டி பாடலாசிரியராகவும் தன்னை நிரூபித்துக் காட்டி வருகிறார்.

கொரோனா காரணமாக இவரது புதிய படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் இவருக்கு பிறந்தநாள் வந்தது, ரசிகர்கள் வாழ்த்து கூறி வந்தனர்.

அதோடு அவரோட காதலி நயன்தாராவும் கோவாவில் ஸ்பெஷல் ஏற்பாடுகள் செய்து விக்னேஷ் சிவன் பிறந்தநாளை கொண்டாடினார்.

அந்த வீடியோக்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலானது. இப்போது என்ன தகவல் என்றால் விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்காக நயன்தாரா செலவு செய்தது மொத்தம் ரூ. 25 லட்சம் என கூறப்படுகிறது.

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை, இப்படி ஒரு தகவல் மட்டும் வைரலாகிறது.