தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா.
இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவதை நாம் அறிவோம். கூடிய விரைவில் இவர்கள் இருவருக்குமே திருமணம் என பல செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கிறது.
ஆனால் தங்களது திருமணம் குறித்து இதுவரை இருவருமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் இவர்களின் திருமணத்தை எதிர்பார்த்து நயன்தாராவின் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் நடிகை நயன்தாரா தேசிய விருது வென்ற பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என முடிவுடன் இருக்கிறாராம் என தகவல்கள் கூறுகின்றன.