Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நயன்தாரா ஸ்டைலில் தனது கணவர் பீட்டர் பாலுடன் பிறந்தநாளை கொண்டாடிய பிக்பாஸ் வனிதா - இதோ

பிக்பாஸ் 3ன் மூலம் மக்களிடம் மீண்டும் தன்னை பிரபலப்படுத்தி கொண்டார் நடிகை வனிதா விஜயகுமார். கொரோனா ஊரடங்கில் பீட்டர்பாலை திருமணம் செய்து கொண்ட வனிதா பல சர்ச்சைகளில் சிக்கினார்.

சமீபத்தில் கூட தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தனது 40வது பிறந்தநாளை கொண்டாட கோவா சென்றுள்ளார். இதற்காக சமூக வலைத்தளங்கள் மூலம் வனிதா விஜயகுமாருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கும் வகையில் வனிதா விஜயகுமார், கோவாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் விக்னேஷ் சிவன் பிறந்தநாளை கொண்டாட அவருடன் நயன்தாரா கோவா பயணம் சென்றிருந்த நிலையில், தற்போது பீட்டர்பால் - வனிதா ஜோடியம் பிறந்தநாளை கொண்டாட கோவா சென்றிருப்பது குறித்து ரசிகர்களால் கூறப்பட்டு வருகிறது.