Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதையே செய்ய முடியல? நீங்க எல்லாம் என்னத்த செய்யப்போறீங்க! கடுமையாக விமர்சித்த நபர்

தமிழ் சினிமாவை சார்ந்த சில அரசியலில் மிகுந்த ஆளுமைகள் செலுத்தியுள்ளார்கள். எம்.ஜி.ஆர். சிவாஜி, ஜெயலலிதா காலத்திலிருந்து இப்போதும் பலர் சினிமாவில் ஆதிக்கம் செய்வது வருவது தொடர்ந்து வருகிறது.

ரஜினியின் அரசியல் முடிவு என்ன? அமைதியாக இருக்கும் காரணம் என்ன? ஏதேனும் வியூகமா என சிலருக்கு தோன்றலாம்.

அதே வேளையில் அவருக்கு இணையாக இருக்கும் உலக நாயகன் கமல் ஹாசன் கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தில் இறங்கிவிட்டார்.

இந்நிலையில் நடிகை குஷ்பு தான் பல வருடமாக இருந்து வந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து பிஜேபியில் இன்று இணைந்துள்ளார்.

சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தை தயாரிப்பவர் சுரேஷ் காமாட்சி. தற்போது அவர் டிவிட்டரில் சினிமாவிற்கு நடிக்க வருகிறார்கள். சினிமா அவர்களை வாழ வைக்கிறது. ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு மக்களைக் காக்கப் போகிறோம் எனப் புறப்பட்டுவிடுகிறார்கள். முதலில் உங்களை வாழவைத்த சினிமாவிற்கு ஏதாவது நல்லது பண்ணுங்க. அதையே செய்ய முடியாத நீங்கள்லாம்... மக்களுக்கு என்னத்த பண்ண போறீங்க?? என விமர்சித்துள்ளார்.

அவர் மறைமுகமாக ரஜினி, கமல், குஷ்பூவை சாடுவது போலுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.