Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விமான விபத்தில் இறந்துபோன முன்னணி நடிகையின் வாழ்க்கை வரலாறு - சாய் பல்லவிக்கு கிடைத்த முக்கிய வாய்ப்பு

நடிகைகளின் வாழ்க்கை வரலாறை படமாக எடுப்பது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. ஆம் கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு. தற்போது கங்கனா ரணாவத் நடித்து வரும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம்.

இந்த படங்களை தவிர்த்து தற்போது விமான விபத்தில் இறந்த நடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை பயோபிக் படமாக உருவாக இருக்கிறது. இவர் ரஜினி,கமல், அமிதாப் பச்சன், கார்த்திக், விஜயகாந்த், சத்யராஜ் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவரானர்.

2004-ம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்ய விமானத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். இவரின் மரணம் அப்போது இந்திய திரையுலகையை அதிர்ச்சியடைய செய்தது.

இந்நிலையில் சவுந்தர்யாவின் வாழ்க்கையை படமாக்கும் ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், இப்படத்தில் சவுந்தர்யா கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்க இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த படத்தில் மட்டும் சாய் பல்லவி நடித்தால் கண்டிப்பாக தமிழில் சாய் பல்லவிக்கு மார்க்கெட் ஏறும் என பல தரப்பில் இருந்து கூறுகின்றனர்.