தொகுப்பாளினியாக விஜய் டிவியில் களமிறங்கியவர் ஜாக்குலின். பல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கிய அவருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.
ஆனால் அவர் தொகுப்பாளினியாக இருக்கும் போதே அவரது குரலுக்காக கலாய்க்கப்பட்டார். அப்போதும் அவர் சிரித்துக் கொண்டே சென்றுவிடுவார்.
இப்போது தேன்மொழி என்ற சீரியலில் நடித்து வருகிறார், இதிலும் ஜாக்குலின் குரல் குறித்து சில மோசமான விமர்சனங்கள் எழுகின்றன.
இந்த நிலையில் நடிகை ஜாக்குலின் தனது இன்ஸ்டா பக்கத்தில், என் அம்மா-அப்பா கொடுத்தது எனது குரல். எனக்கு மிகவும் பிடித்துள்ளது, உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் கேட்காதீர்கள் என கமெண்ட் செய்துள்ளார்.