ரஜினியை தொடர்ந்து மற்றொரு சூப்பர் ஸ்டார் நடிகருடன் இணைந்த நடிகை கீர்த்தி சுரேஷ்.. பிறந்தநாளில் கிடைத்த ஜாக்பாட்
தமிழ் திரையுலகில் மிகவும் சிறந்த நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.
இவர் நடிப்பில் தற்போது குட் லக் சகி எனும் படம் விரைவில் வெளிவரவிருக்கிறது. இதுமட்டுமின்றி தெலுங்கில் நிந்தினுடன் இணைந்து Rang De எனும் படத்தின் நடித்து வருகிறார்.
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முதன் முறையாக கைகோர்த்து சிறுத்தை சிவா இயக்குனர் அண்ணாத்த படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இன்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு, சப்ரைஸ் கொடுக்கும் வகையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார், மகேஷ் பாபு நடித்து வரும் Sarkaru Vaari Paata எனும் படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Thank you so much Mahesh Babu sir🙏
— Keerthy Suresh (@KeerthyOfficial) October 17, 2020
Delighted to be working with you for the first time and really looking forward to this!☺️ #SarkaruVaariPaata@urstrulyMahesh @ParasuramPetla @MythriOfficial @14ReelsPlus @GMBents @MusicThaman https://t.co/KqrpnljbgU