Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மார்க்கெட் இழந்துவிட்டார் நடிகை சாய் பல்லவி!! ஏன் இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்தார்..

ப்ரேமம் படத்தின் மூலம் இளைஞர்களின் கனவு நாயகியாக மாறியவர் நடிகை சாய் பல்லவி. இதன்பின் தெலுங்கில் சில படங்களில் நடித்து வந்தார்.

தமிழில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தியா எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தனுஷின் மாரி 2, சூர்யாவின் என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

கைவசம் லவ் ஸ்டோரி, Viraata Parvam என இரு திரைப்படங்களை வைத்துள்ளார். பட வாய்ப்பில்லாமல் இருக்கும் நடிகை சாய் பல்லவி, முன்னணி நடிகருக்கு தங்கையாக நடிக்கவிருக்கிறாராம்.

ஆம் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் முன்னணி நடிகர் சிரஞ்சீவி நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் லட்சுமி மேனன் நடித்துள்ள அதே கதாபாத்திரத்தில் தெலுங்கில் நடிகை சாய் பல்லவி நடிக்கவிருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.

இதனால் மார்க்கெட் இழந்துவிட்டாரா நடிகை சாய் பல்லவி என்றும், ஏன் இந்த தீடீர் முடிவு என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.