Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அரசு மருத்துவமனையை மாற்றியமைத்த நடிகை ஜோதிகா.. புகழ்ந்து தள்ளும் பிரபலம்..

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும், சமூகத்தில் மிகவும் அக்கறை கொண்ட நபராகவும் விளங்கி வருபவர் நடிகை ஜோதிகா.

இவரின் நடிப்பில் சில ,மாதங்களுக்கு முன்பு வெளியான பொன்மகள் வந்தால் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வெற்றியடைந்தது.

சமீபத்தில் நடிகை ஜோதிகா, படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவர் அந்த படப்பிடிப்பில் இடம்பெற்றுள்ள அரசு மருத்துவமனையை கண்காணித்துள்ளார்.

இந்நிலையில் அந்த மருத்துவமனையை அழகாக்கவேண்டும் என்று, மிகவும் சிறப்பான முறையில் அழகிய ஓவியங்களுடன் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக இரா. சரவணன் தந்து டுவிட்டர் பக்கத்தில் இருந்து தெரிவித்துள்ளார்.