Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் விஜய் சேதுபதியின் திரைப்படத்திலிருந்து விலகினாரா பிரபல நடிகை, மாற்றப்பட்ட முன்னணி நடிகை..!

நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராக கருதப்படுபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்திய அளவில் கவனம் பெற்று வருகிறது.

மேலும் நடிகர் விஜய் சேதுபதி ஏகப்பட்ட திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடிக்கவுள்ளார், அதில் தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் துக்ளக் தர்பார்.

இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அதிதி ராவ் நடிக்கவிருந்தார், ஆனால் தற்போது சில காரணங்களால் அவர் இப்படத்திலிருந்து விலகியுள்ளார்.

மேலும் பிரபல நடிகையான ராஷி கண்ணா அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கு முன் இவர் நடிகர் விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.