Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை சனுஷாவின் தற்கொலை முயற்சிக்கு இது தான் காரணமாம், வீடியோ பதிவில் அவர் கூறிய அதிர்ச்சி தகவல்..

ரேணிகுண்டா திரைப்படத்தின் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சனுஷா, அதனை தொடர்ந்து இவர் அலெக்ஸ் பாண்டியன், கோடி வீரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

மேலும் கடைசியாக தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான ஜெர்சி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை சனுஷா தனக்கு ஏற்பட்ட தற்கொலை எண்ணம் குறித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ''இந்த கொரோனா வைரஸ் சூழ்நிலையில் எனக்கு தொழில் ரீதியாகவும், மன ரீதியாகவும் சில பிரச்சனைகள் ஏற்பட்டது.

இதனால் உருவான அழுத்தத்தை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. ஒரு இருள் சூழ்ந்தது போல இருந்தது. அதனால் தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்தேன்''.

ஆனால், பிறகு என் மீது அன்பு செலுத்துபவர்களுக்காக அந்த முயற்சியை கைவிட்டுவிட்டு, மருத்துவரை சந்தித்து, அலோசனைகள் பெற்றேன். என்னை போன்ற மனநிலைக்கு தள்ளப்பட்டால், உடனே டாக்டரை கண்டிப்பாக அலோசியுங்கள்'' என அவர் தெரிவித்துள்ளார்.