குஷி திரைப்படத்தில் நடிகை ஜோதிகாவிற்கு பதிலாக இந்த முன்னணி நடிகை தான் நடிக்க வேண்டியது, யார் தெரியுமா?
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் 2000ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் குஷி, இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது.
அதுமட்டுமின்றி அப்போது விஜய் தொடர்ந்து பிளாப் படங்களை கொடுத்ததாகவும், இப்படத்தின் வெற்றியால் மீண்டும் முன்னணி நடிகராக மாறினார்.
இந்நிலையில் இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து அசத்தியவர் நடிகை ஜோதிகா, இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காதல் காட்சிகள் தற்போது வரையில் ரசிகர்களால் ரசிக்க படுகிறது.
மேலும் நடிகை ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தேர்வு செயப்பட்டது, நடிகை சிம்ரன் தான். ஆம் வாலி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து குஷி திரைப்படத்திலும் நடிக்க வைக்க எஸ்.ஜே.சூர்யா விரும்பினாராம்.
ஆனால் பின்னர் ஜோதிகா நடித்து இப்படத்திற்காக பிலிம் பேர் விருதை வென்றுள்ளார்.