Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை பூமிகா கணவரை விவாகரத்து செய்துவிட்டாரா? சர்ச்சைக்கிடையில் நடிகையின் அதிரடி ட்விட்

விஜய்யுடன் பத்ரி படத்தில் ஜானகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூமிகா. பின் குஷி, ரோஜாக்கூட்டம் படத்தில் நடித்தவர் மூன்று வருடங்கள் கழித்து சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்திருந்தார்.

தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என தொடர்ந்து மற்ற மொழி படங்களில் நடித்து வந்தவரை 5 வருடங்கள் கழித்தே சிறுத்தை படம் மூலம் பார்க்க முடிந்தது.

பின் களவாடிய பொழுதுகள், யூ டர்ன் என சில வருடங்கள் இடைவெளி. இவ்வருடம் கண்ணை நம்பாதே படத்தில் நடித்துள்ளார். பரத் தக்கூர் என்பவரை கடந்த 2000 ல் திருமணம் செய்து கொண்டவர்.

அண்மைகாலமாக அவர் விவாகரத்து செய்து கொண்டார் என தகவல் சுற்றி வர அவர் திருமண நாளில் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.