Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கடும் எதிர்ப்பு! புகார் - அதை செய்யாவிட்டால் இது நடக்கும்? மிரட்டல் விட்ட அரசியல் கும்பல்!

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகராக அக்‌ஷய் குமார் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அது அவருக்கு வெற்றியை அளிப்பதுடன் நல்ல வசூலையும் அள்ளித்தருகிறது.

இதனால் அதிகம் சம்பாதிக்கும் நடிகராக இருக்கும் அவர் சமூக சேவை, மக்களுக்கு உதவுதல் என பல நல்ல காரியங்களை செய்துவருகிறார்.

அவரின் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் லட்சுமி பாம். தமிழில் வெளியான காஞ்சனா படத்தில் ரீமேக்கான இப்படத்தில் அவர் திருநங்கையாக நடித்துள்ளார்.

தற்போது அப்படத்திற்கு எதிர்ப்பு சூழ்ந்துள்ளது. படத்தின் பெயர் இந்துக்களின் மனதை புண்படுத்துவது போல் உள்ளதாகவும், பெயரை மாற்ற வேண்டும், இல்லையெனில் தியேட்டர் வாசலில் போராட்டம் நடத்துவோம் என ஹிந்து சேனா அமைப்பு சினிமா பிரிவுக்கான மத்திய அமைச்சரிடம் புகார் அளித்துள்ளது.

மேலும் boycott Laxmmi Bomb என கூறி படத்தை புறக்கணிப்பதாக கூறியுள்ளனர்.