Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சன் பிக்சர்ஸ் பெயரில் பிரபல நடிகைக்கு வந்த பாலியல் தொல்லை- சிக்கினாரா?

பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு குறைந்துகொண்டே வருகிறது என்று தான் கூற வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கூட கிடைப்பதில்லை.

இங்கேயும் ஒரு சினிமா நடிகைக்கும் அப்படி ஒரு பிரச்சனை. அவர் சமூக வலைதளத்தில் சன் பிக்சர்ஸ் ஒரு படத்திற்காக நடிகை தேடுவதாக விளம்பரம் பார்க்க அதில் இருந்து நம்பரை தொடர்பு கொண்டுள்ளார்.

முதலில் புகைப்படம், வீடியோ அனுப்ப கேட்ட அவர்கள் பின் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் நடிகை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த நடிகையின் பெயர் சரளா, அவர் கைதி படத்தில் சின்ன வேடத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தரப்பிலும் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது, ஏனெனில் நடிகையை தொடர்பு கொண்ட நபர் அவர்களது நிறுவனத்தில் பணிபுரிபவர் கிடையாதாம்.