Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விருதுகளை வாரிக்குவித்த வீரசிவாஜி பட இயக்குனரின் புதிய படம்..

பிரபல தொலைக்காட்சி நடிகர் ஆர்யாவை முன்னிலைப்படுத்தி நடந்த வந்து நிகழ்ச்சி தான் எங்க வீட்டு மாப்பிள்ளை. இதில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தான் அபர்ணதி.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகும், தான் ஆர்யாவை காதலித்து வருவதாக கூறி பல சர்ச்சைகளில் சிக்கினார். இது ஒரு புறம் இருந்தாலும் கூட மற்றொரு புறம் திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆம் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் நடித்து வரும் ஜெயில் எனும் படத்தில் இவர் தான் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் தற்போது கணேஷ் விநாயக் என்பவர் இயக்கும் திரைப்படத்தில் கன்னட நடிகர் சுளிலே குமார் என்பவருடன் நடித்து முடித்துள்ளார். மேலும் இப்படம் வெளியாவதற்கு முன்பே பல விருதுகளை வாரிக்குவித்துள்ளது

இயக்குனர் கணேஷ் விநாயக் என்பவர் இப்படத்திற்கு முன்பு தமிழில் விக்ரம் பிரபு நடித்து வெளியான வீரசிவாஜி எனும் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.