Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் பிரபல நடிகரின் படத்தில் நடிக்கிறாரா அசின்- வெளிவந்த தகவல்

தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாத நடிகைகளில் ஒருவர் அசின். தமிழில் நிறைய படங்கள் நடித்தாலும் பெரிய ஹிட் கொடுத்தது கஜினி திரைப்படம் தான்.

அப்படம் மூலம் பாலிவுட்டிற்கு சென்ற அவர் அங்கேயும் கலக்கி வந்தார்.

ஒருகட்டத்தில் அவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. உடனே அவர் திருமண பந்தத்தில் இணைய அவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.

சினிமாவில் இருந்து விலகியே இருக்கும் அசின் மீண்டும் நடிக்க வருகிறார் என செய்திகள் வெளியானது. ஆனால் அசினுக்கு நெருங்கிய சிலர் அவருக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்கின்றனர்.