கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனா இது?- அந்த காலத்தில் எப்படி இருந்திருக்கார் பாருங்க, ரசிகர்கள் ஷாக்
நடிகர் கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். நாயகியாக இவர் கலக்கி வந்தாலும் ஸ்ருதிக்கு மிகவும் பிடித்தது இசை தான்.
வெளிநாடுகளில் மேடை கச்சேரி நடத்துவது, படங்களில் பாடுவது என இசையில் தனது ஆர்வத்தை அதிகம் காட்டியிருக்கிறார்.
தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் தனது நடிப்பு திறமையை காட்டி அங்குள்ள ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.
தற்போது இவரது பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கமல்ஹாசன் தெனாலி படப்பிடிப்பின் போது ஏ.ஆர். ரகுமான், கிரேஸி மோகன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் உள்ள ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
அதில் நடிகை ஸ்ருதிஹாசனும் உள்ளார், அதில் ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு ஒல்லியாக, வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் இருக்கிறார்.