Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டிவி சீரியல் நடிகை கைது! கையும் களவுமாக சிக்கிய சம்பவம்! அடுத்தடுத்து அம்பலமாகும் பயங்கரம்!

திரைத்துறையை சேர்ந்த சிலரும் வெளியே தெரியாமல் சில குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதும் பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல போலிசிடம் சிக்கிக்கொள்வதும் நடைபெற்று வருகிறது.

அண்மையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை விசாரணையில் தொடங்கிய போதை பொருள் புழக்கத்தில் அவரின் காதலி ரியா, காதலியின் தம்பி சோவிக் மற்றும் சாமுவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தில் நடிகைகள் ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோனே, ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான் ஆகியோடுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்றும் வருகிறது.

மேலும் கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரும் கைதாகினர். அடுத்தடுத்து துப்பு துலங்கி பலருக்கும் போதை பொருள் சம்பவத்தில் தொடர்பிருப்பது தெரிவருகிறது.

தற்போது சீரியல் நடிகை பிரீத்திகா சவுகானை கைது செய்துள்ளனர். பொது இடத்தில் அவர் கஞ்சா வாங்கியபோது அவரை போலிசார் பிடித்துள்ளனர்.