தயாரிப்பாளரால் கத்தி குத்துக்கு ஆளான சீரியல் நடிகையின் தற்போதைய நிலை- மருத்துவமனையில் இருந்து வந்த தகவல்
குமாரி 18 ப்ளஸ் என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை மால்வி மல்ஹோத்ரா.
இவர் சின்னத்திரை வட்டத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர். சில தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்துள்ளார்.
யோகேஷ் குமார் என்ற தயாரிப்பாளருடன் பட வாய்ப்புக்காக மால்வி அவரை தொடர்பு கொண்டிருக்கிறார்.
ஆனால் அவரோ திருமணம் செய்துகொள்ள நடிகையை தொந்தரவு செய்ய நடிகை அவரிடம் பழகுவதை நிறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தயாரிப்பாளர் யோகேஷ் நடிகையை நான்கு முறை கத்தியால் குத்தியுள்ளார்.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை நலமாக இருப்பதாக கூறப்படுகிறது.