பிக்பாஸின் சில எபிசோடுகளை நடத்த நடிகை சமந்தாவிற்கு இத்தனை கோடி சம்பளமா?

தெலுங்கில் பிக்பாஸ் 4வது சீசன் எப்போதோ தொடங்கிவிட்டது. இதனை நடிகர் நாகர்ஜுனா அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இடையில் அவருக்கு சில படப்பிடிப்பு வேலைகள் வர அவருக்கு பதிலாக நடிகை சமந்தா களத்தில் இறங்கினார். அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்றதும் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பு பெரிதாகியுள்ளது.

3 வாரங்கள் அவர் தொகுத்து வழங்க இருக்கிறாராம், அதற்காக மட்டும் அவருக்கு ரூ. 2 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வந்த நாகர்ஜுனாவிற்கு மொத்தமாக ரூ. 8 கோடி சம்பளம் என பேசப்பட்டதாம்.