தமிழ் சினிமாவில் பல லட்சம் ரசிகர்களை கவர்ந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை த்ரிஷா. தனது சினிமா வாழ்க்கையை சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் துவங்கினார்.
முதல் படமே வெற்றி என்பதால் தொடர்ந்து விஜய், அஜித், விக்ரம், தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
நடிகை த்ரிஷாவிற்கு பிரபல தொழிலதிபர் ஒருவருடன் திருமணம், நிச்சயதார்த்தம் வரை சென்றது. ஆனால் சில காரணங்களால் இந்த திருமணம் நடக்காமல் போனது.
மேலும் தெலுங்கு நடிகரான ராணாவை த்ரிஷா காதலித்து வந்தார் என்றும் அவரை தான் திருமணம் செய்ய போகிறார் என்று திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் தனது வருங்கால கணவர் குறித்து பேசியுள்ளார் நடிகை த்ரிஷா " என் திருமணம் பற்றி முன்பே முடிவு செய்ததைத்தான் இப்போதும் சொல்கிறேன். என்னை முழுமையாக புரிந்து கொள்ளும் நபரை திருமணம் செய்து கொள்வேன். அது காதல் திருமணமாகவே இருக்கும். அப்படி ஒருவரை நான் நேரில் சந்திக்கும்போது என் திருமணம் நடக்கும். அதுவரை, நான் சிங்கிள் தான். அதை பற்றி கவலைப்படவில்லை. ஒருவேளை அப்படி ஒருவரை சந்திக்கவில்லை என்றால், இப்படியே இருந்து விடுவேன். அதுபற்றியும் நான் கவலைப்பட மாட்டேன் ". என்று கூறியுள்ளார்.