Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபு தேவாவுடன் இருந்த காதல் முறிவுக்கு பின் நடிகை நயன்தாரா கொடுத்த முதல் பேட்டி இது தான், வீடியோவுடன் இதோ..

நடிகை நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக உள்ளார், இவருக்கு முன்னணி நடிகர்களுக்கு சமமாக ரசிகர்கள் வட்டம் உள்ளது.

தீபாவளி அன்று இவர் நடிப்பில் RJ பாலாஜி இயக்கத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் தற்போது நெற்றிக்கண் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் டீசர் வெளியாகி ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இந்நிலையில் முன்னதாக நடிகை நயன்தாரா நடிகர் பிரபுதேவாவை காதலித்து வந்தார், இவர்கள் இருவரும் ஒன்றாகவே எந்த ஒரு போது நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர்.

ஆனால் பின்னர் சில காரணங்களால் இவர்கள் தங்களின் காதலை முறித்து கொண்டனர், இது அப்போது மிக பெரிய சர்ச்சையாக பேசப்பட்டது.

இதனிடையே நயன்தாரா தனது காதல் முறிவுக்கு பின் அதிகமாக படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார், அவர் அப்போது நடித்த ஒருசில படங்களில் ஒன்று தான் ஸ்ரீ ராமா ராஜ்யம்.

இப்படம் குறித்து நடிகை நயன்தாரா அளித்த பேட்டி வெளியாகியுள்ளது, மேலும் இதுவே நயந்தாரா தனது காதல் முறிவுக்கு பின் அளித்த முதல் பேட்டியாகும்.