Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கடும் எதிர்ப்பு! கோவிலுக்குள் ரொமான்ஸ் காட்சி வீடியோ! சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகையின் படம்!

காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை தபு. பாலிவுட் சினிமாவை சேர்ந்த இவர் தற்போது A Suitable Boy என்ற படத்தில் நடித்துள்ளார். ஓடிடியில் இப்படம் வெளியாகியுள்ளது.

இதில் Danesh Razvi, Ishaan Khatter and Tanya Maniktala என பலர் நடித்துள்ளனர்.

இந்து மத பெண்ணாக வரும் Tanya Maniktala இஸ்லாம் மத இளைஞர் Danesh Razvi ஐ காதலிப்பது போலவும் கோவிலும் இருவரும் லிப் லாக் முத்தம் கொடுப்பது போல காட்சிகள் அமைந்துள்ளன.

தற்போது இந்த காட்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிஜேபி கட்சியை சேர்ந்த Gaurav Goel என்பவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் இந்த மத கடவுள்களை அவமதித்தால் IPC 295 A பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பதிவிட்டுள்ளார்.

இதற்கு மத்திய பிரதேஷ உள்துறை அமைச்சர் மிஷ்ரா விளக்கமளித்துள்ளார்.