Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாவ கதைகள் படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அஞ்சலி, வெளியான புதிய ட்ரைலரால் வெடித்த சர்ச்சை..

இயக்குனர்கள் வெற்றிமாறன், கவுதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள Anthology திரைப்படம் தான் பாவ கதைகள்.

இப்படம் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி பிரபல OTT தளமான Netfilx-ல் வெளியாகவுள்ளது, இதற்காக ரசிகர்கள் பலரும் அவளோடு காத்து கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் வரும் ஒரு பகுதியை இயக்கியுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன், அந்த கதையில் நடிகை அஞ்சலி மற்றும் கல்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி இப்படத்தில் இவர்கள் பெண் ஓரின சேர்க்கையாளர்களாக நடித்துள்ளனர், ஆம் சர்ச்சையாக பார்க்கப்படும் இந்த கதாபாத்திரத்தை நடிகை அஞ்சலி துணிந்து எப்படி நடித்துள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.