தமிழ் சினிமாவின் அடுத்த நயன்தாரா இவர் தானா! வரிசைகட்டி நிற்கும் 10 திரைப்படங்கள்..
தமிழ் திரையுலக ரசிகர்கள் மனதில் லேடி சூப்பர் ஸ்டாராக இடம் பிடித்தவர் முன்னணி நடிகை நயன்தாரா.
இவர் நடிப்பில் தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என கிட்டத்தட்ட சுமார் 80 படங்களுக்கும் மேல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் இவர் தான் என்று வளர்ந்து வரும் பிரபல நடிகை ப்ரியா பவானி சங்கரின் பெயர் அடிபடுகிறது.
அதற்கு ஏற்றார் போல் கிட்டத்தட்ட 10 படங்களுக்கும் மேல் கமிட்டாகி நடித்து வருகிறாராம் நடிகை ப்ரியா பவானி சங்கர்.
அதிலும் அடுத்த வரும் மட்டும் இவர் நடித்துள்ள 10 திரைப்படங்கள் வெளியாகவுள்ளதாம். அவை எந்தெந்த திரைப்படங்கள் தெரியுமா.. இதோ :
1. ஓ மண பெண்ணே
2. பத்து தல
3. பொம்மை
4. களத்தில் சந்திப்போம்
5. குருதி ஆட்டம்
6. ருத்ரன்
7. இந்தியன் 2
8. கசட தபற
9. வான்
10. அசோக் செல்வன் உடன் பெயரிடப்படாத படம்
இதனால் கண்டிப்பாக இன்னும் சில வருடங்களில் முன்னணி நடிகைகளின் உச்ச நட்சத்திரமாக நடிகை ப்ரியா பவானி சங்கர் விளங்குவார் என்று கூறப்படுகிறது.