சூரியாவின் நடிப்பில் அமிர் இயக்கத்தில் வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா.
இதன்பின் விக்ரம், விஜய், அஜித், தனுஷ், சமீபத்தில் ரஜினியுடன் பேட்ட என கடந்த 18 வருடங்களாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் நடிகை த்ரிஷா.
சில தோல்வி படங்கள் மூலம் பின்தங்கி இருந்து நடிகை த்ரிஷா விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து வெளியான 96 திரைப்படத்தின் மூலம் மீண்டும் முன்னணி நடிகையாக விளங்கினார்.
அதே போல் தற்போது பரமபத ஆட்டம், ராங்கி, பொன்னியின் செல்வன் என பல திரைப்படங்கள் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பல நாட்கள் கழித்து முகத்தில் துளியும் மேக்கப் போடாமல் அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..