மூக்குத்தி அம்மன் படத்தில் முதன் முதலில் அம்மனாக நடிக்க வேண்டியது நயன்தாரா கிடையாதாம்.. வேறு எந்த நடிகை தெரியுமா! இதோ
ஆர்.ஜெ. பாலாஜி மற்றும் என்.ஜெ. சரவணனின் இயக்கத்தில் பல வருடங்கள் கழித்து வெளியான சாமி திரைப்படம் மூக்குத்தி அம்மன்.
இப்படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ஹாட்ஸ்டரில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மூக்குத்தி அம்மனாக இப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்திருந்தது படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் உதவியது.
ஆனால் முதன் முதலில் மூக்குத்தி அம்மன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது நடிகை ஸ்ருதி ஹாசன் என்று இயக்குனர் ஆர்.ஜெ. பாலாஜி கூறியுள்ளார்.
நடிகை ஸ்ருதி ஹாசனிடம் கதை சொல்லி ஓகே செய்து பிறகு, நடிகை நயன்தாராவும் இந்த கதையை கேட்டு ஓகே சொல்லிவிட்டாராம்.
இதனால் நடிகை நயன்தாராவை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்தாராம் ஆர்.ஜெ. பாலாஜி.