Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஸ்ரீ திவ்யாவின் சீக்ரட் போட்டோ! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய செய்தி!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை மறக்க முடியுமா என்ன. நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக லதா பாண்டியாக நடித்து ரசிகர்களின் மனத்தில் அழகான கிராமத்து பெண்ணாக இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இப்படம் தான் இவருக்கு இன்று வரை அடையாளமாக அமைந்து வருகிறது.

அதன் பின் இவருக்கு ஈட்டி, பெங்களூரு நாட்கள், பென்சில், ரெமோ, மருது என பல படங்கள் வந்தாலும் பெரியளவில் முக்கியத்துவம் இல்லாமலே இருப்பது போலிருக்கிறது.

தெலுங்கு படங்களில் நடிக்கு வாய்ப்புகள் தேடி வர அவரும் அதனுடன் சங்கமாகிவிட்டார். சோசியல் மீடியாக்களில் போட்டோ போட்டு அப்டேட் செய்வதை தொடர்ந்து வரும் அவரின் பழைய கால போட்டோ ஒன்று கையில் சிக்கியுள்ளது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் கையில் சிறுமியாக இருக்கிறார். 2000 ல் வெளியான யுவராஜ் என்ற படத்தில் நடிக்கும் போது எடுத்ததாம்.