Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திரையுலகில் தன்னை விட வயது குறைந்த ஆண்களை மணந்தவர்கள்! ஸ்பெஷல் கவர் ஸ்டோரி

திரையுலகம் என்றாலே எதிலும் புதுமை தான், திருமணம் விஷத்திலும் இவர்கள் தனிப்பட்டு தான் தெரிவார்கள் போல. அந்த வகையில் தன்னை விட வயது அதிகமான பெண்களை திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் யார்? யார்? என்ற தொகுப்பு தான் இந்த பகுதி.

ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் பச்சன்

நம் எல்லோருக்கும் தெரிந்த உலக அழகி ஐஸ்வர்யா ராய் தான், இவர் யாரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று 1000 கேள்விகள் அனைவரையும் சுற்றி வர, அவர் தன்னை விட 3 வயது குறைவான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.

ஃபராகான் -ஷிரிஸ் குந்தர்

இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற பெண் நடன இயக்குனர் ஃபரா கான். இயக்குனராகவும் இருக்கும் இவர் தன்னை விட 8 வயது குறைவான எடிட்டர் மற்றும் இயக்குனர் ஷிரிஸ் குந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அதுனா- ஃபரான் அக்தர்

சென்ற வருடம் பாக் மில்கா பாக் என்ற படத்தின் மூலம் நம் எல்லோர் மனதையும் கவர்ந்தவர் ஃபரான் அக்தர். இவர் சிறந்த இயக்குனரும் கூட, இவர் தன்னை விட 6 வயது பெரியவரான அதுனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். டில் சாத்தாஹே என்ற படத்தின் கதை டிஸ்கஷன் போது இவர்களுக்குள் காதல் மலர்ந்தது.

ஆதித்யா பஞ்சோலி- ஜரினா வகாப்

பாலிவுட் திரையுலகின் பிரபல குணச்சித்திர நடிகர் ஆதித்யா பஞ்சோலி தன்னை விட 6 வயது மூத்தவரான ஜரினா வகாப் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர் தன் 28 வயதில் திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுனில் தத்- நர்கிஸ்

1957ல் வெளிவந்த மதர் இந்தியா என்ற படத்தில் அறிமுகமான ஜோடி சுனில்- நர்கிஸ். இவர்களுக்குள் படத்தில் ஏற்பட்ட காதல், நிஜ வாழ்க்கையிலும் தொடர்ந்து பின் திருமணமானது. இவர் தன் மனைவியை விட சில ஆண்டுகள் இளையவர். மதர் இந்தியா திரைப்படம் ஆஸ்கர் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.

அர்ஜுன் ராம்பால்- மெர் ஜெஸ்ஸி

மெர் ஜெஸ்ஸிக்கு, அர்ஹுன் ராம்பாலை விட 2 வயது அதிகம், இவர் மாடலிங் துறையில் மிகவும் பிரபலமானவர். அர்ஜுன் இவர் மீது கொண்ட காதலால் இவரையே திருமணம் செய்து கொண்டார்.

ஷில்பா ஷெட்டி-ராஜ் குந்தரா

ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டில் ராஜஸ்தான் அணியின் பாட்னர்களாக இருந்த இவர்கள், காதலர்களாக மாறி பின் திருமணம் செய்து கொண்டனர். ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்தராவை விட 2 ஆண்டுகள் பெரியவர்.

தனுஷ்-ஐஸ்வர்யா

பாலிவுட்டை தொடர்ந்து தமிழ் திரையுலகிலும் தனுஷ் தன்னை விட 1 வருட பெரியவரான சூப்பர் ஸ்டார் மகள் ஐஸ்வர்யாவை மணந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் வெளியாகிறது ஆர்முடுகல்